திண்டுக்கல் : 'ஊர்க்காவல் படை காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்' என, எஸ்.பி.,ரவளிப்பிரியா தெரிவித்தார்.
அவர் தெரிவித்தது: ஊர்க்காவல் படையில் 44 ஆண்கள், 10 பெண்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவர், வயது 20-45 க்குள். மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்க கூடாது. சாதி, மத, அரசியல், சங்கத்திலும் உறுப்பினராக இருக்க கூடாது. பொதுமக்கள், அரசு, தனியார் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம்.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, கல்வி சான்றிதழ், ஆதார், இருப்பிட சான்று, நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம், தனித்திறமை சான்றிதழ் அசல், சுய சான்றொப்பமிட்ட நகலுடன் நவ.19 காலை 9:00 மணிக்கு சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராக வேண்டும். மாதம் 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 ஊதியம் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE