மதுரை:திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 9652 பேர் குணமாகியுள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 18372 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 32 பேர் பாதிக்கப்பட்டனர். இருவர் பலியாகினர். மொத்த பாதிப்பு 19202 ஆகும். இதுவரை 426 பேர் இறந்துள்ளனர். தற்போது 404 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 21 பேர் கொரோனாவில் இருந்து குணமாகினர். இதுவரை 9652 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 10001 ஆக அதிகரித்தது. இன்னும் 160 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உட்பட இதுவரை 189 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் நேற்று 10 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். மொத்தம் 16132 பேர் குணமடைந்து உள்ளனர். புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 16410 ஆக உயர்ந்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை 67 வயது முதியவர் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். பலி எண்ணிக்கை 308
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 6 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டனர். மொத்தம் 6100 பேர் பாதிக்கப்பட்டதில் 5916 பேர் குணமடைந்தனர். தற்போது 54 பேர் சிகிச்சையில் உள்ளனர். 130 பேர் பலியாகியுள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 3 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். மொத்தம் 6096 பேர் பாதிக்கப் பட்டதில் 5823 பேர் குணமடைந்தனர். இதுவரை 126 பேர் பலியாகினர். 136 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விருதுநகர்
விருதுநகரில் நேற்று 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 20 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. ஒருவர் பலியானார். பாதிப்புக்குள்ளான 15635 பேரில் 15313 பேர் குணமடைந்தனர். 98 பேர் சிகிச்சையில் உள்ளனர். 224 பேர் பலியாகியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE