தீபாவளி பரிசு லஞ்சம் கொடுக்காதீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பரிசு லஞ்சம் கொடுக்காதீர்

Added : நவ 13, 2020
Share
துாத்துக்குடி:''கோர்ட் ஊழியர்களுக்கு போலீசார் தீபாவளிக்கு பட்டாசு இனிப்பு பார்சல் பரிசுப்பொருட்களை கொடுக்காதீர்கள். அது லஞ்சமாகவே கருதப்படும்'' என துாத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ''தீபாவளியின் போது போலீசார் கோர்ட் ஊழியர்களுக்கு பட்டாசு இனிப்பு

துாத்துக்குடி:''கோர்ட் ஊழியர்களுக்கு போலீசார் தீபாவளிக்கு பட்டாசு இனிப்பு பார்சல் பரிசுப்பொருட்களை கொடுக்காதீர்கள். அது லஞ்சமாகவே கருதப்படும்'' என துாத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமாருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ''தீபாவளியின் போது போலீசார் கோர்ட் ஊழியர்களுக்கு பட்டாசு இனிப்பு பரிசுப்பொருட்களை வழங்குவது நடைமுறையில் இருப்பதாக அறிகிறேன். இவ்வாறு வழங்குவதும் லஞ்சம் என லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளில் உள்ளது. எனவே மாவட்ட போலீசார் இனி பரிசுப்பொருட்கள் வழங்க வேண்டாம் என தெரிவியுங்கள்'' என கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் போலீசார் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X