ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் மோதி துாண்களுக்குள் சிக்கிய மிதவை படகை மீட்பதில் சிக்கல் தொடருவதால் ரயிலுக்கான தடை நீடிக்கிறது.
நவ.9 இரவு நங்கூர கயிறு அறுந்ததால் பாம்பன் கடலில் நிறுத்தப்பட்ட இரும்பு மிதவை படகு ரயில் பாலத்தில் மோதி 120 121வது துாண்களுக்கு இடையே சிக்கியது. சூறாவளியுடன் இரு நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்ததால் மிதவை படகை மீட்க முடியாமல் ரயில்வே பொறியாளர்கள் தவித்தனர்.
நேற்று காற்றின் வேகம் குறைந்தது. அதிக குதிரைதிறன் இன்ஜின் பொருத்திய நான்கு விசைப்படகுகள் மூலம் காலை 7:00 மணிக்கு மிதவை படகை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
11 மணிநேரம் முயற்சித்தும் படகை மீட்க முடியவில்லை. இதனால் ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் செல்ல தடை நீடிக்கிறது. ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் இறக்கி விடப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE