சம்பவம் செய்தி

தமிழ்நாடு

200 அடி பள்ளத்தில் உருண்ட ஜீப்

Added : நவ 13, 2020
Share
Advertisement
போடி:தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையில் வேகமாக வந்த ஜீப் 200 அடி பள்ளத்தில் உருண்டதில் போடிமெட்டு அருகே மணப்பட்டியை சேர்ந்த ஜீப் டிரைவர் முருகன் 65 அதே பகுதி சுபாஷ் பாண்டியன் 20 அவரது தம்பி சிவப்பிரகாசம் 18 உறவினர் புலிமுருகேசன் 53 காந்தாமணி 55 ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.முருகன் ஜீப்பில் சுபாஷ் பாண்டியன் உட்பட 4 பேரும் போடி குப்பிநாயக்கன்பட்டி உறவினர் வீட்டு

போடி:தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையில் வேகமாக வந்த ஜீப் 200 அடி பள்ளத்தில் உருண்டதில் போடிமெட்டு அருகே மணப்பட்டியை சேர்ந்த ஜீப் டிரைவர் முருகன் 65 அதே பகுதி சுபாஷ் பாண்டியன் 20 அவரது தம்பி சிவப்பிரகாசம் 18 உறவினர் புலிமுருகேசன் 53 காந்தாமணி 55 ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
முருகன் ஜீப்பில் சுபாஷ் பாண்டியன் உட்பட 4 பேரும் போடி குப்பிநாயக்கன்பட்டி உறவினர் வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு போடிமெட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். மதியம் 3:00 மணியளவில் 15வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது ரோட்டில் இருந்த பாறைக்கற்கள் மீது ஏறிய ஜீப் 200 அடி பள்ளத்தில் உருண்டது. பலத்த காயமடைந்த ஐந்து பேரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X