ஊட்டி:ஓய்வூதியதாரர்களுக்கு, வீடுதேடி சென்று டிஜிட்டல் வாழ்வு சான்று வழங்க, தபால் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஆண்டுதோறும் நவ., மாதம் ஓய்வூதியதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்களின் விபரத்தை, பதிவு செய்ய வேண்டும். நடப்பாண்டில், கொரோனா பரவல் காரணமாக, ஓய்வூதியதாரர் பலர், நேரில் செல்லவும், சான்று சமர்ப்பிக்கவும் முடியாத காரணத்தால் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசின், 'ஜீவன் பிரதான்' திட்டத்தில் முதல் முறையாக, தபால் துறையின், 'இந்திய போஸ்டல் பேமென்ட் பேங்க்' மூலமாக வீடு தேடி சென்று ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்வு சான்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி கோட்ட கண்காணிப்பாளர் குணசீலன் கூறியதாவது;ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், தொலைபேசி எண், பி.பி.ஓ., எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு எண் விபரங்களை தெரிவித்து, கைரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்வு சான்று கிடைக்கும்; வங்கி கணக்கில் ஓய்வூதியம் சேர்ந்துவிடும். இதற்கு சேவை கட்டணமாக, 70 ரூபாய் தபால்காரரிடம் செலுத்தவேண்டும். தபால்காரர் அணுக முடியாதவர்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்துக்கு சென்று டிஜிட்டல் வாழ்வு சான்று பெறலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE