சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பன் பாலத்தில் மோதிய படகை மீட்பதில் இழுபறி

Added : நவ 13, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் மோதி, துாண்களுக்குள் சிக்கிய மிதவை படகை மீட்பதில் சிக்கல் தொடர்வதால், ரயிலுக்கான தடை நீடிக்கிறது.ராமேஸ்வரம் அருகே, பாம்பன் பாலத்தில் நவ., 9 இரவு, நங்கூர கயிறு அறுந்ததால், பாம்பன் கடலில் நிறுத்தப்பட்ட இரும்பு மிதவை படகு, ரயில் பாலத்தில் மோதி, 120, 121வது துாண்களுக்கு இடையே சிக்கியது.சூறாவளியுடன் இரு நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்ததால்,

ராமேஸ்வரம்:பாம்பன் பாலத்தில் மோதி, துாண்களுக்குள் சிக்கிய மிதவை படகை மீட்பதில் சிக்கல் தொடர்வதால், ரயிலுக்கான தடை நீடிக்கிறது.

ராமேஸ்வரம் அருகே, பாம்பன் பாலத்தில் நவ., 9 இரவு, நங்கூர கயிறு அறுந்ததால், பாம்பன் கடலில் நிறுத்தப்பட்ட இரும்பு மிதவை படகு, ரயில் பாலத்தில் மோதி, 120, 121வது துாண்களுக்கு இடையே சிக்கியது.சூறாவளியுடன் இரு நாட்களாக கடல் கொந்தளிப்பு அதிகரித்ததால், மிதவை படகை மீட்க முடியாமல், ரயில்வே பொறியாளர்கள் தவித்தனர்.

நேற்று காற்றின் வேகம் குறைந்தது. அதிக குதிரைத் திறன் இன்ஜின் பொருத்திய நான்கு விசைப்படகுகள் மூலம் காலை, 7:00 மணிக்கு மிதவை படகை, கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டனர். 11 மணி நேரம் முயற்சித்தும், படகை மீட்க முடிய வில்லை. இதனால், ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் செல்ல தடை நீடிக்கிறது. ராமேஸ்வரம் அருகே மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில், பயணியர் இறக்கி விடப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X