பொது செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் பறக்கிறது...

Added : நவ 13, 2020
Share
Advertisement
பாரம்பரிய முறைப்படி, தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள, நொறுக்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் வாடிக்கையாளர்களும் மொய்க்கின்றனர்.இதன் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது:மொத்த ஆர்டர்களை பேக் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு, வெளியூர் ஆர்டர்கள் வந்துள்ளன. இதற்கு காரணம்,
 விமானத்தில் பறக்கிறது...

பாரம்பரிய முறைப்படி, தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.கோவை ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் உள்ள, நொறுக்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் வாடிக்கையாளர்களும் மொய்க்கின்றனர்.இதன் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் கூறியதாவது:மொத்த ஆர்டர்களை பேக் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு, வெளியூர் ஆர்டர்கள் வந்துள்ளன. இதற்கு காரணம், எங்கள் தயாரிப்புகளின் தரம்தான். பாரம்பரிய உணவு தானியங்களை கொண்டும், சுத்தமான நெய் மற்றும் எண்ணெய்யை பயன்படுத்தியும், இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கிறோம். இனிப்புக்கு பனங்கருப்பட்டி, தென்னை வெல்லம், நாட்டுச் சர்க்கரை பயன்படுத்துகிறோம். செயற்கை கலர் பயன்படுத்துவதில்லை. கார வகையை பொறுத்தவரை கம்பு, சாமை, திணை, கோதுமை மாவுகளில்தான் தயாரிக்கிறோம்.இதில் கருப்பட்டி தேங்காய் பர்பி, அத்தி பேரிச்சை மைசூர்பா, கருப்பட்டி காஜூ கட்லி, கருந்திராட்சை பேரிச்சை மைசூர்பா, பீட்ரூட் பனங்கருப்பட்டி மைசூர்பா, திணை, கம்பு, கோதுமை, பச்சை பயிறு இவற்றுடன், நாட்டு சர்க்கரை கலந்த லட்டு ஆகியவை அதிக விற்பனையாகின்றன. இந்த தீபாவளிக்கு எங்களுக்கு வெளிநாட்டு ஆர்டர்களும் வந்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X