மதுரை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூர்- செங்கோட்டை வாரம் மும்முறை சிறப்பு ரயிலில் (06181) நான்கு இரண்டாம் வகுப்பு படுக்கை, சென்னை எழும்பூரில் புறப்படும் கொல்லம் சிறப்பு ரயில் (06723), திருநெல்வேலி சிறப்பு ரயில் (02631), செங்கோட்டை சிறப்பு ரயில் (02661), கன்னியாகுமரி, துாத்துக்குடிக்கு இயக்கப்படும் ரயில்களில் தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை, நாகர்கோவில் வாரம் இருமுறை ரயிலில் (06063) ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.சென்னை எழும்பூர் -காரைக்குடி சிறப்பு ரயிலில் (02605) ஒரு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE