சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் தீ ரூ.30 லட்சம் பொருட்கள் நாசம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
சென்னை:சென்னை, குன்றத்துார் அருகே, சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.சென்னை, முகப்பேரைச் சேர்ந்தவர் சையது ஜாபர். குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில், சோபா மற்றும் பர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு, 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.நிறுவனத்தின் கீழ்தளத்தில்,
 சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் தீ ரூ.30 லட்சம் பொருட்கள் நாசம்

சென்னை:சென்னை, குன்றத்துார் அருகே, சோபா தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னை, முகப்பேரைச் சேர்ந்தவர் சையது ஜாபர். குன்றத்துாரை அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில், சோபா மற்றும் பர்னிச்சர் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு, 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.நிறுவனத்தின் கீழ்தளத்தில், வாகனங்களுக்கு பொருத்தப்படும் பேரிங், மேல் தளத்தில், சோபா தயாரிக்கும் பணி நடக்கிறது. நேற்று மதியம், ஊழியர்கள் உணவருந்தச் சென்றனர். அப்போது, சோபா தயாரிக்கும் இடத்தில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது.

சற்று நேரத்தில், தீ மளமளவென பரவியதால், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பூந்தமல்லி, தாம்பரம் பகுதிகளில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து, அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X