கோவை:தீபாவளிக்கு முன்தினம், 'தந்தேராஸ்' பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்களிடம் தங்கம் வாங்க அழைக்கிறது தங்கமயில் ஜூவல்லரி.தங்கமயில் ஜூவல்லரி நிர்வாகத்தினர் கூறியதாவது:இந்த தந்தேராஸ் என்ற வார்த்தை, இரு சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. 'தன்' என்றால், செல்வம் என்று பொருள்; 'தேராஸ்' என்றால், 13வது நாள் என்று பொருள். அதன்படி, இன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒப்பணக்கார வீதி தங்கமயில் ஜூவல்லரியில், சிறப்பு விற்பனை நடக்கிறது.இந்நாளில் மாலை நேரத்தில், லட்சுமி பூஜை செய்து, வீட்டில் விளக்குகள் ஏற்றி வைத்து, இந்து பாரம்பரியப்படி தங்கம், வெள்ளி, புதிய பாத்திரங்கள் வாங்கலாம். அக்ஷயதிரிதியை மற்றும் ஆடிப்பெருக்கில் தங்கம், வெள்ளி பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்த மக்கள், இன்று வாங்கி மகிழலாம். தீபாவளி சிறப்பு விற்பனை காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE