திருப்பூர்:'விதிமீறி பட்டாசுகளை ரயிலில் கொண்டு சென்றால், மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்,' என, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலர்கள் எச்சரித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.அபாயகரமான, எளிதில் வெடிக்க கூடிய பொருட்களை பயணத்தின் போது ரயிலில் எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரித்து, அபராதம் விதிக்கின்றனர். இருப்பினும், விதிமீறி பலரும் பட்டாசுகளை எடுத்துச் செல்வது தொடர்கிறது.நடப்பாண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் மட்டுமே பயணம் என்பதால், கண்காணிப்பை ரயில்வே முடுக்கி விட்டுள்ளது. பட்டாசுகளை கொண்டு சென்றால், ரயில்வே பாதுகாப்பு சட்டப்படி பறிமுதல் செய்யப்படும்.இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால், மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்குமென, ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE