திருப்பூர்:கொப்பரை விலை குறையாமல் தொடர்வதால், பண்டிகை நாளில் தேங்காய் விலை குறையாமல் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது.நடப்பு மாத துவக்கத்தில், 108 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கொப்பரை விலை மெல்ல உயர்ந்து, 122 ரூபாயை எட்டிபிடித்தது. தற்போது, 115 ரூபாய். கொப்பரை விலை உயர்வதுடன், அவ்வப்போது மாற்றங்களை சந்திப்பதால் தேங்காய் விலை நிலையில்லாமல் உள்ளது.அவ்வகையில், சிறிய ரக தேங்காய், 13 ரூபாய், நடுத்தரம், 19 ரூபாய். பெரியது, 26 ரூபாய் வரை உழவர் சந்தையில் விற்கப்படுகிறது. பத்து ரூபாய்க்கு குறைவாக தேங்காய் இல்லை. வெளிமார்க்கெட்டில் தேங்காய் குறைந்தபட்சம், 15 ரூபாய் முதல் அதிகபட்சம், 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில், 'ஆயுதபூஜைக்கு பின் கொப்பரை விலை குறையுமென எதிர்பார்த்தோம். ஆனால், கிலோவுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே குறைந்தது. 115 முதல், 118 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பல இடங்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், விலையை உயர்த்தி வைத்து விற்கின்றனர்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE