பல்லடம்:இச்சிப்பட்டி ஊராட்சியில், பாறைக்குழி ஒன்று குப்பை கிடங்காக மாறி வருவதால், திடக்கழிவு மேலாண்மை கேள்விக்குறியாகி வருகிறது.பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில், கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில், பயன்பாடு இல்லாத கல் குவாரிகளில், ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருகிறது.பிளாஸ்டிக், காய்கறி கழிவு, கட்டடம், மற்றும் கோழி இறைச்சி கழிவுகள் என, அனைத்து குப்பையும் கொட்டப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டம், இச்சிப்பட்டி ஊராட்சியில் கேள்விக்குறியாக உள்ளது.சுகாதார கேடு ஏற்படுத்தும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றவும் ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE