திருப்பூர்:அலுவலக நிர்வாகம் குறித்து அனைத்து அலுவலக பணியாளர்களுக்கும் பயிற்சி வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி கல்வித்துறையில் கடந்த ஜூன் 18 முதல் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் சீரமைக்கப்பட்டு அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில், கல்வித்துறை அலுவலங்களில், பள்ளிகளில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் கோப்புகளை கையாளுவதிலும், முக்கியத்துவம் அளிப்பதிலும், நீதிமன்ற கோப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதலும், பதிவேடுகள் பராமரிப்பு போன்றவற்றில் உரிய பயிற்சிகள் அளிக்க தேவை ஏற்பட்டுள்ளது.மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், புதியதாக, 640 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் தேவையான அலுவலக நிர்வாக பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, வருவாய் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பணியாளர்களுக்கு அலுவலகம் சார்ந்த பயிற்சி அளிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE