பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடு

Added : நவ 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:பண்டிகை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே பண்டிகை கொண்டாட்டம் களை கட்ட துவங்கியது. புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்கவும், போனஸ் தொகையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் கடை வீதியில் நிரம்பி வழிந்தது.திருப்பூரைப்
 கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் கூட்ட நெரிசலை தடுக்க ஏற்பாடு

திருப்பூர்:பண்டிகை விடுமுறைக்கு வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, பஸ் ஸ்டாண்டில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே பண்டிகை கொண்டாட்டம் களை கட்ட துவங்கியது. புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்கவும், போனஸ் தொகையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் கடை வீதியில் நிரம்பி வழிந்தது.திருப்பூரைப் பொறுத்தவரை பனியன் உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், நிறுவன ஊழியர்கள் வசிக்கின்றனர்.தீபாவளி போன்ற பண்டிகையின் போது கிடைக்கும் நீண்ட நாள் விடுமுறையின் போது தங்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம். அவ்வகையில், வெளியூர் செல்லும் மக்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.கடந்த இரண்டு நாளாகவே, திருப்பூர் பகுதியிலிருந்து சிறப்பு பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. கோவில்வழியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து, தென் மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகின்றன.பண்டிகையின் போது, அதிகளவிலான பயணிகள் வந்து கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால், அங்கு பயணிகள் பஸ் ஏற வசதியாக தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தள்ளு முள்ளு இன்றி பயணிகள் வசதியாக பஸ்சில் ஏற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X