பொது செய்தி

தமிழ்நாடு

கிராமக்கோவில் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கணும்!

Added : நவ 13, 2020
Share
Advertisement
சூலூர்:'திருக்கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதைப்போல், கிராமக்கோவில் பூஜாரிகளுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும்' என, கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில்

சூலூர்:'திருக்கோவில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதைப்போல், கிராமக்கோவில் பூஜாரிகளுக்கும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும்' என, கோவில் பூஜாரிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்திருந்தோம். சட்டசபையில், 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஓய்வூதியம், ரூ. 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என, அறிவித்தார்.அறநிலையத் துறை கோவில் பணியாளர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அவர்களுக்கு நான்கு மாதங்களாக ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆனால், பூஜாரிகளுக்கு என தனி அரசாணை வெளியிடுவதில் அரசு காலதாமதம் செய்கிறது. உடனடியாக அரசாணை வெளியிட்டு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X