மேட்டுப்பாளையம்:கறிவேப்பிலை ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு அறுவடை செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில், கறிவேப்பிலை பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யும் கறிவேப்பிலை, கேரள மாநிலத்துக்கும், தமிழகத்தில், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய ஊர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த மாதம், அறுவடை செய்யும் இடத்தில், ஒரு கிலோ அதிகபட்ச விலையாக, 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது. இரு மடங்கு விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.விவசாயி குமரேசன் கூறியதாவது:ஊரடங்கு தளர்வுக்கு பின், ஓட்டல்கள் திறந்து, திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியுள்ளன. தேவை அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ கறிவேப்பிலை, 45ல் இருந்து, 50 ரூபாய் விலைக்கு, வியாபாரிகள் தோட்டத்திலேயே அறுவடை செய்கின்றனர். இரு மாதங்களுக்கு முன், ஒரு கிலோ 15ல் இருந்து, 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்துள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.கருவேப்பிலை வியாபாரி நாகராஜ் கூறுகையில், 'சில விவசாய நிலங்களில், 25ல் இருந்து, 30 ரூபாய்க்கு, மொத்த விலைக்கு அறுவடை செய்து வருகிறோம். வாங்கிச் செல்லும் வியாபாரிகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், பழமுதிர் நிலையங்களில், ஒரு கிலோ, 60ல் இருந்து, 75 ரூபாய் வரை, சில்லறையில் விற்பனை செய்கின்றனர். விலை உயர்வானது, இந்த மாதம் முழுவதும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE