பொது செய்தி

தமிழ்நாடு

விண்ணை தொடும் மரங்கள்: களப்பணியாளர்கள் மகிழ்ச்சி

Added : நவ 13, 2020
Share
Advertisement
சூலுார்:கலங்கல் வனத்தின் ஆண்டு விழாவில் களப்பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சூலுார் அடுத்த கலங்கல் கிராமத்தில் கடந்தாண்டு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளால், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு 'கலங்கல் வனம்' உருவாக்கப்பட்டது. தற்போது, அவை பல அடி உயரம் வளர்ந்துள்ளன. ஓராண்டு நிறைவை ஒட்டி களப்பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.மண்டல நகராட்சி நிர்வாக

சூலுார்:கலங்கல் வனத்தின் ஆண்டு விழாவில் களப்பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.சூலுார் அடுத்த கலங்கல் கிராமத்தில் கடந்தாண்டு, பல்வேறு தன்னார்வ அமைப்புகளால், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு 'கலங்கல் வனம்' உருவாக்கப்பட்டது. தற்போது, அவை பல அடி உயரம் வளர்ந்துள்ளன. ஓராண்டு நிறைவை ஒட்டி களப்பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சரவணக்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''மரக்கன்றுகளை நடவு செய்வது மட்டுமல்லாமல், அதை முறையாக வளர்க்கும் பணிகளை செய்து வரும் களப்பணியாளர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எதிர்கால சமுதாயம் பயன்பெறும் வகையில் நாம் ஒவ்வொருவரும் அனைத்து துறைகளிலும் சிந்திக்க வேண்டும்," என்றார். ஆர்வலர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். தொடர்ந்து, பாபு, அன்புராஜ், ராஜ்குமார், செல்வராஜ், மகாலிங்கம், தியாகராஜன், சுந்தர்ராஜ் உள்ளிட்ட களப்பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X