பொது செய்தி

தமிழ்நாடு

பூவன் எழுச்சி; நேந்திரன் வீழ்ச்சி!

Added : நவ 13, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:ஒரு கிலோ நேந்திரன் வாழை விலை, 15 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பண்டிகை சீசனிலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் வாழைக்காய் ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 4,500 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஏலத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய், குறைந்த பட்சம், 10 ரூபாய்க்கும், அதிகபட்சம், 15 ரூபாய்க்கும் ஏலம்
 பூவன் எழுச்சி; நேந்திரன் வீழ்ச்சி!

மேட்டுப்பாளையம்:ஒரு கிலோ நேந்திரன் வாழை விலை, 15 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பண்டிகை சீசனிலும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையம் வாழைக்காய் ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 4,500 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஏலத்தில் ஒரு கிலோ நேந்திரன் வாழைக்காய், குறைந்த பட்சம், 10 ரூபாய்க்கும், அதிகபட்சம், 15 ரூபாய்க்கும் ஏலம் போனது. கதளி குறைந்தபட்சம், 35 க்கும், அதிகபட்சம், 40 ரூபாய்க்கும் ஏலம் போனது.நேந்திரன் வாழைக்கு விலை உயர்வு ஏதும் கிடைக்காததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பூவன் ஒரு வாழைத்தார் குறைந்தபட்சம், 100க்கும், அதிகபட்சம், 350க்கும், தேன்வாழை குறைந்தபட்சம், 100க்கும், அதிகபட்சம், 550க்கும், செவ்வாழை குறைந்தபட்சம், 150க்கும், அதிகபட்சம், 550க்கும், ரஸ்தாலி குறைந்தபட்சம், 150க்கும், அதிகபட்சம், 450 ரூபாய்க்கும் ஏலம் போனது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தாருக்கு மட்டுமே, 50 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. எந்த வாழைக்கும் விலை உயர்வு இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஏல மைய நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, சின்னராஜ் கூறுகையில், ''கேரளா வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் வரவில்லை. அதனால் ஒரு மாதமாகவே நேந்திரன் உள்பட வேறு எந்த வாழைக்கும், விலை உயர்வு இல்லை,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X