திருப்பூர்:மத்திய அரசின் கொரோனா கால திட்டங்கள், புதிய இந்தியாவை உருவாக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது.இது குறித்து, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் அறிக்கை:கொரோனா தொற்று காலத்தில், மத்திய அரசு, தொழில் வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து, நாட்டை எழுச்சிபெறச் செய்துள்ளது. ரூ.2.65 லட்சம் கோடி மதிப்பில் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் மூன்றாம் பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இதற்காக, பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஏ.இ.பி.சி., நன்றி தெரிவிக்கிறது. அவசர கால கடன் திட்டம், வரும் 2021 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், கடன் வழங்குவதற்கான விதிமுறையில், ரூ.500 கோடியாக இருந்த ஏற்றுமதி வர்த்தக உச்சவரம்பு தளர்த்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.நெருக்கடியான இச்சூழலில், தொழில்துறையை முடுக்கிவிடும் இந்த திட்டம், நீண்ட காலம் பயணிக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசின் கொரோனா கால திட்டங்கள், புதிய இந்தியாவை உருவாக்கும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது.'எக்ஸிம்' வங்கிக்கு, 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; ஆயிரத்துக்கும் குறைவான பணியாளரை கொண்ட நிறுவனங்களில், புதிய பணியாளர்களுக்கான பி.எப்., பங்களிப்பை வழங்க உறுதி அளிக்கும் ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.பத்து துறைகளை தேர்வுசெய்து, உற்பத்தி சார்ந்த ஊக்கச் சலுகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செயற்கை இழை, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி துறைகள் வளர்ச்சி பெறும்; வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE