கோவில்பாளையம்:வரும், 22ம் தேதி, கோவை வடக்கு மாவட்டத்தில், வேல் யாத்திரையில் அதிகளவில் பங்கேற்க, பா.ஜ., கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பா.ஜ., கட்சி நிர்வாகிகள் கூட்டம், ஒன்றிய தலைவர் கோபால் தலைமையில் கோவில்பாளையத்தில் நடந்ததுமாவட்ட பொது செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேசன் பேசுகையில், ''வேல் யாத்திரை குறித்து அனைத்து கிராமங்களிலும் தகவல் தெரிவிக்க வேண்டும். பெரியோர், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரையும் திரட்ட வேண்டும். மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு, கோவை வடக்கு மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு அளிக்க வேண்டும். அங்கிருந்து மருதமலை வரை செல்லும் யாத்திரையில் அதிகளவில் பங்கேற்க வேண்டும்" என்றார்.வரும், 22ம் தேதி, மேட்டுப்பாளையத்தில், வேல் யாத்திரை வரவேற்பு நிகழ்ச்சியில், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE