திருப்பூர்:தீபாவளி பண்டிகைக்கு பூ வாங்க வாடிக்கையாளர் குவிந்ததால், நேற்று மல்லிகை பூ கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.பண்டிகை என்றாலே பூக்கள் விலை அதிகரித்து விடுகிறது. தீபாவளி போன்ற மக்கள் விரும்பும் பண்டிகை நாட்களில் பூக்கள் விலை உயர்ந்தே இருக்கும். அவ்வகையில், கடந்த வாரம் கிலோ, 300 ரூபாய் இருந்த மல்லிகை பூ விலை இரு நாட்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது.திருப்பூர் பூ மார்க்கெட்டு நேற்று, 1.5 டன் மல்லிகை பூ விற்பனைக்கு வந்த போதும், பூ வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறைந்ததால், ஒரு கிலோ மல்லிகை பூ, 1,000 ரூபாய்க்கு விற்றது. முல்லை கிலோ, 800 ரூபாயாக இருந்தது. விலை உயர்வாக இருந்த போதும் பூ வாங்கும் ஆர்வம் பெண் மத்தியில் குறையவில்லை. பூ வியாபாரிகள் கூறுகையில், 'தீபாவளி நாளில் கிலோ, 2,400 ரூபாய்க்கு விற்கப்படும். பனிப்பொழிவு பூ விலை குறைவாக வந்துள்ளது. இருப்பினும், எதிர்பார்த்த விலை உயர்வு இல்லை,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE