பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே அனுமதி பெறாமல் பட்டாசு விற்பனை செய்த மண்டபத்துக்கு, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., 'சீல்' வைத்தார்.துடியலுார் - மேட்டுப்பாளையம் சாலை, விஸ்வநாதபுரம் அருகே சி.கே. மஹால் திருமண மண்டபத்தில், பட்டாசு கடை நடத்த, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., அனுமதி மறுத்தார். இருப்பினும், அங்கு பட்டாசு விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷ்குமார் மண்டபத்தில் தணிக்கை செய்து, 'சீல்' வைத்தார். மேலும், முறையான ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை ஏற்றி வந்த வாகனத்தையும், பறிமுதல் செய்தார். வாகனம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர், பட்டாசு வியாபாரம் செய்த பாலசுப்ரமணியம் ஆகியோர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE