உடுமலை;சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.மாநில அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள், அரசு, அரசு உதவிபெறும், மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.மேலும், பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.விண்ணப்பங்களை சரிபார்க்க, இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விபரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னர் விண்ணப்பங்களை சரிபார்க்க முடியும்.இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, எளிமையாக இருக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களின் யு.டி.ஐ.எஸ்.ஹச்.இ., என்.சி.வி.டி., ஏ.ஐ.எஸ்.ஹச்.இ.. உள்ளிட்ட குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.மேலும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகளை இணையத்தளத்தில் பார்வையிட்டு, அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு, நவ.,30 ம்தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE