சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேக்கு மரம் கடத்த முயற்சி :மடக்கி பிடித்த பொதுமக்கள்

Added : நவ 13, 2020
Share
Advertisement
அன்னுார்: அனுமதியின்றி, தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்தனர்.அன்னுார் அருகே போயனுாரில், ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் பராமரிப்பில்லாமல் உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. யாரோ சிலர் அங்கிருந்த தேக்கு மற்றும் வேப்ப மரங்களை வெட்டி, ஒரு லாரியில் ஏற்றி கடத்த முயன்றனர்.இதைக் கண்ட இப்பகுதி மக்கள், லாரியை மடக்கி பிடித்து, வருவாய்
 தேக்கு மரம் கடத்த முயற்சி :மடக்கி பிடித்த பொதுமக்கள்

அன்னுார்: அனுமதியின்றி, தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் பிடித்தனர்.அன்னுார் அருகே போயனுாரில், ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் பராமரிப்பில்லாமல் உள்ளது. இந்த இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. யாரோ சிலர் அங்கிருந்த தேக்கு மற்றும் வேப்ப மரங்களை வெட்டி, ஒரு லாரியில் ஏற்றி கடத்த முயன்றனர்.இதைக் கண்ட இப்பகுதி மக்கள், லாரியை மடக்கி பிடித்து, வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அன்னுார் வடக்கு வருவாய் ஆய்வாளர் பெனசீர் பேகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், தேக்கு மரம் பாதுகாக்கப்பட்டது என்பதால், சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகளிடம் அந்த லாரியையும், தேக்கு மரங்களையும் உரிய நடவடிக்கைக்கு ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X