பொது செய்தி

தமிழ்நாடு

ஊருக்கு போறீங்களா; சொல்லீட்டு போங்க!

Added : நவ 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதி மக்கள், தீபாவளிக்கு வெளியூர் சென்றால், போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமென, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் கூறியதாவது:தீபாவளிக்கு அனைத்து பகுதிகளிலும், ரோந்து சென்று திருட்டு சம்பவங்களை குறைக்க, ஆயுதப்படை போலீசார், ஸ்டேஷன் போலீசார் என, 90 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மக்கள் அதிகம்

ஆனைமலை:ஆனைமலை, கோட்டூர் சுற்றுப்பகுதி மக்கள், தீபாவளிக்கு வெளியூர் சென்றால், போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்க வேண்டுமென, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஆனைமலை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் கூறியதாவது:தீபாவளிக்கு அனைத்து பகுதிகளிலும், ரோந்து சென்று திருட்டு சம்பவங்களை குறைக்க, ஆயுதப்படை போலீசார், ஸ்டேஷன் போலீசார் என, 90 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடைவீதி, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பொது இடங்களில் போலீசார் பணியில் இருப்பார்கள்.வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, தீபாவளிக்கு வெளியூருக்கு செல்லும் போது, அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்தால், ரோந்து செல்லும் போது வீடுகளை கண்காணித்து பாதுகாப்பு வழங்கப்படும்.வீடுகளில் அதிக நகை, பணத்தை வைத்து விட்டு வெளியூர்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல், தீபாவளிக்கு வெளியில் நடமாடும் போதும், பெண்கள் அதிக நகை அணிவதை தவிர்க்க வேண்டும். பைக்கில் வந்து யாராவது முகவரி கேட்டாலோ, பேசினாலோ மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனைமலை பகுதியில் வசிப்போர், 04253 282230, 94981 01172, கோட்டூர், 04259 286233, 94981 01182, ஆழியாறு, 04253 288738, 94981 01171 என்ற எண்ணில், போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் தெரிவிக்கலாம்.இவ்வாறு, இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-நவ-202011:46:51 IST Report Abuse
Ram Pollachi நல்லவனுக்கு அழகு சொல்லாமல் போவது! அப்புறம் உங்க இஷ்டம்!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X