பொது செய்தி

தமிழ்நாடு

'மியாவாக்கி' திட்டப்பணிகள் 19 ஊராட்சிகளில் துவக்கம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் 'மியாவாக்கி' திட்டப்பணிகள், 19 ஊராட்சிகளில் துவங்கியுள்ளது.நிலத்தடி நீர்வளம், மழைவளத்தை அதிகரிக்க, நடப்பாண்டில், மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு, அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில், நடப்பாண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு, இலக்கு

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் 'மியாவாக்கி' திட்டப்பணிகள், 19 ஊராட்சிகளில் துவங்கியுள்ளது.நிலத்தடி நீர்வளம், மழைவளத்தை அதிகரிக்க, நடப்பாண்டில், மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு, அரசின் சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில், நடப்பாண்டில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, உடுமலையில் கூடுதலாக, 'மியாவாக்கி' எனப்படும் அடர் நடவு திட்டத்தை செயல்படுத்தவும், ஒன்றிய கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டத்தை செயல்படுத்த இடவசதி உள்ள ஊராட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. தோட்டக்கலை துறை மற்றும் வனத்துறை உதவியுடன், இத்திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.உடுமலையில் ஆண்டியகவுண்டனுார், அந்தியூர், போடிபட்டி, குருவப்பநாயக்கனுார், ஜல்லிபட்டி, குரல்குட்டை, குறிஞ்சேரி, பள்ளபாளையம், வடபூதிநத்தம், செல்லப்பம்பாளையம், பெரியபாப்பனுாத்து உட்பட 19 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் அடர்நடவு செய்வதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'உடுமலையில், 19 ஊராட்சிகளில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடக்கிறது. இதில், நான்கு ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மீதமுள்ள ஊராட்சிகளிலும், கன்றுகள் நடுவதற்கு, குழிகள் எடுக்கப்பட்டு, தயார்படுத்தப்படுகிறது. இடவசதி மற்றும் மரக்கன்றுகள் எண்ணிக்கை அடிப்டையில் நிதிஒதுக்கீடு வழங்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X