பொள்ளாச்சி:''வெடி வைக்காமல், செடி வளர்த்து, பசுமை தீபாவளியாக பண்டிகையை கொண்டாடுவோம்,'' என, பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகைக்கு 'வெடி' வெடிக்காமல், பசுமை தீபாவளியாக கொண்டாடுவோம் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறியதாவது:தீபாவளி பண்டிகையை மாசில்லாத, சப்தமில்லாத தீபாவளியாக கொண்டாடுவோம். பட்டாசு வெடிப்பதால், காற்று மாசுபடும். 'வெடி'யின் புகையால், மனிதனுக்கு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக ஓசையின் அதிர்வால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளது. சுற்றுச்சூழல் மாசு, காற்று மாசு கட்டுப்படுத்துவதில் அனைவரின் பங்களிப்பும் அவசியமாகும்.'வெடி'க்கு பதிலாக, செடி நடவு செய்வோம். தீபாவளியன்று ஒவ்வொரும் ஒரு மரக்கன்றுகளை நடவு செய்வோம் என, உறுதியேற்று செயல்படுத்துவோம். சாலையோரம், வீடுகள் அருகே என, இடம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவோம். மரக்கன்று வளர்ப்போம்; வருங்கால சந்ததிகளுக்கு பசுமையான உலகை கொடுப்போம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE