ஊட்டி:ஊட்டியில், தீபாவளி பண்டிகை வியாபாரம் உற்சாகமின்றி இருந்தால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரியில் தீபாவளி பண்டிகை அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாய தோட்டம்; அரசு தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பண்டிகைக்கு முன், ஊட்டி நகரத்துக்கு வந்து, அனைத்து பொருட்களையும் வாங்கி செல்வது வழக்கம்.இந்நிலையில், மார்ச் மாதம் முதல் தொடர்ந்த கொரோனா தொற்றால், மக்கள் வேலை வாய்ப்பின்றியும், வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டியில், தற்போது கடைகள் முழுவதும் திறந்த பின்பு, கடந்த ஆண்டுகளை போல, துணிகடைகள் உட்பட பிற கடைகளில் கூட்டம் இல்லை. குறைவாக காணப்பட்டது.மார்க்கெட், கமர்சியல் சாலை முக்கிய சாலைகளில் உள்ள கடைகள் வியாபாரமின்றி வெறிச் சோடி காணப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE