பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், கொரோனா தொற்று பாதித்த, 320 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சியில், 338 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 320 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்; பத்து பேர் சிகிச்சையில் உள்ளனர். எட்டு பேர் இறந்துள்ளனர்.நேற்றைய நிலவரப்படி, பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த, 48 வயதான பெண்; ஜமீன்ஊத்துக்குளியில், 50 வயதான ஆண்; வசியாபுரத்தில், 30 வயதான ஆண்; சமத்துாரில், 50 வயதான ஆண்; ஆவல் சின்னாம்பாளையத்தில், 40 வயதான பெண், என மொத்தம், ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE