பொது செய்தி

தமிழ்நாடு

சிவ பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு

Added : நவ 13, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவிலில், ராமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்கேஸ்வரர் அருள்பாலித்தார்.மாகாளியம்மன் கோவிலில், ருத்ரலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நந்தி பகவானுக்கு சிறப்பு அபிேஷகம் அலங்கார பூஜை நடந்தது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோவில்களில், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள, காசிவிஸ்வநாதருக்கு ஜப்பசி மாத இரண்டாவது பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. பூஜையில், மாலை, 5:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமியை வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X