கோத்தகிரி:'கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் கட்டடம் கட்ட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.கோத்தகிரி வக்கீல் சங்க தலைவர் பாலசுப்ரமணி மற்றும் துணைதலைவர் சங்கரன் ஆகியோர் முதல்வரிடம் நேரில் அளித்த மனு:கோத்தகிரியில், 1992ம் ஆண்டு நீதித்துறை நடுவர் நீதிமன்றம்; 1995ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.குறுகிய கட்டடத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், நீதிமன்ற அலுவலர்கள், வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்பாக வரும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கடந்த, 2018ல் நீலகிரி கலெக்டர் கோத்தகிரி சக்திமலை பகுதியில், 40 சென்ட் நிலத்தை ஒதுக்கி, அரசாணைக்காக கருத்துரு அனுப்பியுள்ள நிலையில், குறிப்பிட்ட நிலம், நீதிமன்றத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதில், நீதிமன்ற கட்டடம், வக்கீல்கள் அறை, நீதிபதி குடியிருப்பு ஆகியவை கட்டப்படும் பட்சத்தில், இடம் நெருக்கடி குறைய வாய்ப்புள்ளது. எனவே, நீதிமன்ற புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, விரைவில் அடிக்கல் நாட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE