பந்தலுார்:பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், அரசு பள்ளியில் படித்து 'நீட்' தேர்வில் சாதித்த, மூன்று மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.பந்தலுார் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன்-. இவரின் மகள் குணவதி-,18. பந்தலுார் அரசு மேல்நிலை பள்ளியில் கணித பிரிவில் படித்து, தேர்வில், 385 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து, கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில் பத்து நாட்கள் பங்கேற்று படித்து, 'நீட்' தேர்வு எழுதி, 144 மதிப்பெண் பெற்று,337 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றார். எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இவரின் தந்தை கட்டட வேலையும்; தாயார் எஸ்டேட் வேலையும் செய்து வருகின்றனர்.*கொளப்பள்ளி அருகே, படைச்சேரி கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்வரின் மகள் கமலி.18. அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளியில் கணித பிரிவில் படித்த இவர், தேர்வில்,444 மதிப்பெண் பெற்றார். கூடலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் பயிற்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்துள்ளார். தற்போது நடந்த நீட் தேர்வில், 127 மதிப்பெண் பெற்று, 500-வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது, எம்.பி.பி.எஸ்., படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.* அய்யன் கொல்லி பகுதியை சேர்ந்த பிரகாசன் என்பவரின் மகன் நிதின்-,18.அம்பலமூலா அரசு மேல்நிலை பள்ளியில் கணிதத்தில் படித்த இவர், தேர்வில், 451 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து, வீட்டிலிருந்து உயிரியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பாட புத்தகங்களை படித்து, நீட் தேர்வு எழுதியதில், 145 மதிப்பெண்கள் பெற்று, 326-வது இடத்தை பிடித்துள்ளார். எம்.பி.பி.எஸ். படிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். தந்தை ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் படித்து தேர்வில் வெற்றி பெற்ற மூவரையும்,ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE