பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணையை தூர் வாரினால் பயன்: மழை காலங்களில் தண்ணீர் வீண்

Added : நவ 13, 2020
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் மணலி அருகே, ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை துார்வாரி சீரமைக்க வேண்டும்.கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தி, சேமுண்டி, கீச்சலுார், புத்துார் வயல் பகுதி மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் கோடையில் காய்கறிகள்; பருவமழை காலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கோடையில், போதிய பாசனநீர் கிடைக்காமல் விவசாயிகள்
 தடுப்பணையை தூர் வாரினால் பயன்: மழை காலங்களில் தண்ணீர் வீண்

கூடலுார்:கூடலுார் மணலி அருகே, ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை துார்வாரி சீரமைக்க வேண்டும்.கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாத்தி, சேமுண்டி, கீச்சலுார், புத்துார் வயல் பகுதி மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இவர்கள் கோடையில் காய்கறிகள்; பருவமழை காலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். கோடையில், போதிய பாசனநீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். இதற்கு தீர்வாக, கம்மாத்தி ஆற்றின் குறுக்கே, மணலி என்ற பகுதியில் தடுப்பணை அமைத்து, பாசன கால்வாய் மூலம் விவசாயத்திற்கு, பாசன நீர் வழங்கி வருகின்றனர். தற்போது, இந்த தடுப்பணையில் மண் நிறைந்து, நீர் தாவரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், அதில், முழுமையாக தண்ணீரை தேக்கவும்; கோடையில், பாசனத்துக்கு முழுமையாக நீர் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே, தடுப்பணையை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X