பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடிகளுக்கு புதிய வீடு கட்டுமான பணி

Added : நவ 13, 2020
Share
Advertisement
கூடலுார்:'கூடலுாரில், மழையால் பாதிக்கப்பட்ட புறமனவயல், பழங்குடி கிராம மக்களுக்கு ஒரு மாதத்தில் புதிய வீடுகள் வழங்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடலுார் புறமனவயல் கிராமத்தில், 46 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆக., மாதம் பெய்த மழையின் போது, கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து பல வீடுகள் பாதிக்கப்பட்டன. கிராம மக்கள்
 பழங்குடிகளுக்கு புதிய வீடு கட்டுமான பணி

கூடலுார்:'கூடலுாரில், மழையால் பாதிக்கப்பட்ட புறமனவயல், பழங்குடி கிராம மக்களுக்கு ஒரு மாதத்தில் புதிய வீடுகள் வழங்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கூடலுார் புறமனவயல் கிராமத்தில், 46 பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆக., மாதம் பெய்த மழையின் போது, கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து பல வீடுகள் பாதிக்கப்பட்டன. கிராம மக்கள் மீட்கப்பட்டு அத்திப்பள்ளி அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல பழைய வீடுகள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்பகுதியில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், பழைய வீடுகளுக்கு மாற்றாக, அப்பகுதியில், கட்டப்பட்டு வரும், புதிய இலவச வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடித்து, வீடுகளை ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு அரசின் சார்பில் புதிய வீடுகள் கட்டும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஒரு மாதத்துக்குள் பணிகள் முடிந்து, வீடுகள் ஒப்படைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X