பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கிடைக்காமல் அவதி: அதிகாரிகளிடம் மக்கள் மனு

Added : நவ 13, 2020
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அருகே, நெல்லியாளம் நகராட்சிக்குஉட்பட்ட பகுதியில் காட்டிமட்டம் பகுதி அமைந்துள்ளது.வனத்தை ஒட்டிய இந்த கிராமத்தில், 30-குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் தடைபட்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மாலையில், 2:00 -மணி சப்ளை செய்யப்பட்ட குடிநீரும், தற்போது தடைபட்டுள்ளதால் மக்கள் வனப்பகுதிக்குள்
 குடிநீர் கிடைக்காமல் அவதி: அதிகாரிகளிடம் மக்கள் மனு

பந்தலுார்:பந்தலுார் அருகே, நெல்லியாளம் நகராட்சிக்குஉட்பட்ட பகுதியில் காட்டிமட்டம் பகுதி அமைந்துள்ளது.வனத்தை ஒட்டிய இந்த கிராமத்தில், 30-குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் தடைபட்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். மாலையில், 2:00 -மணி சப்ளை செய்யப்பட்ட குடிநீரும், தற்போது தடைபட்டுள்ளதால் மக்கள் வனப்பகுதிக்குள் சென்று, மாசு கலந்த தண்ணீர் சுமந்து வர வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகளால் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.அதிகாரிகள் கூறுகையில்,'அப்பகுதியை பார்வையிட்டு தொடர்ச்சியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X