குன்னுார்:குன்னுார் காட்டேரியில், தீயணைப்பு துறை, காவல்துறையுடன் இணைந்து, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குன்னுார் தீயணைப்பு நிலையத்துடன், காவல் துறையினர் இணைந்து, காட்டேரி, ஓட்டுபட்டறை பகுதிகளில், விபத்தில்லாத பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.குன்னுார் நிலைய அலுவலர் மோகன் தலைமையில், காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., செல்வம் முன்னிலையில், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில், 'பட்டாசுகளை பாதுகாப்புடன் வெடிப்பது; தீக்காயம் ஏற்பட்டால் அளிக்கும் முதலுதவி சிகிச்சை,' தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE