கோவை:கோவை, திருப்பூரில் பழைய இரும்பு விற்பனை குடோன்களில் ஜி.எஸ்.டி., அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.கோவை, திருப்பூரில் பொருட்களை வினியோகம் செய்யாமல் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, கோவை ஜி.எஸ்.டி., துணை கமிஷனர் கோவிந்தராஜ் தலைமையிலான அதிகாரிகள், பழைய இரும்பு விற்பனை குடோன்களில் நேற்று சோதனை நடத்தினர்.கோவையில் கணபதி, சின்னவேடம்பட்டி பகுதியிலும், திருப்பூரில் பழைய இரும்பு விற்பனை யூனிட் ஒன்று என, 15 இடங்களில் நேற்று முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், போலி ரசீது மூலம் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.சில நிறுவனங்களில் போலி ரசீது, வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜி.எஸ்.டி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE