பொது செய்தி

தமிழ்நாடு

என்.டி.சி., மில்களில் போனஸ் வினியோகம்

Added : நவ 13, 2020
Share
Advertisement
கோவை:தமிழகத்திலுள்ள ஏழு என்.டி.சி., மில்களில் பணிபுரியும், 4,000 தொழிலாளர்களுக்கு நேற்று தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்கப்பட்டது.தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமாக, தமிழகத்தில் ஏழு மில்கள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக மில் இயக்கம் மார்ச், 23 முதல் நிறுத்தப்பட்டது. மில்களை திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், மதுரை மண்டல தொழிலாளர்

கோவை:தமிழகத்திலுள்ள ஏழு என்.டி.சி., மில்களில் பணிபுரியும், 4,000 தொழிலாளர்களுக்கு நேற்று தீபாவளி பண்டிகைக்கான போனஸ் வழங்கப்பட்டது.தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமாக, தமிழகத்தில் ஏழு மில்கள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக மில் இயக்கம் மார்ச், 23 முதல் நிறுத்தப்பட்டது. மில்களை திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியதால், மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை கமிஷனர் சிவராஜ் தலைமையில், முத்தரப்பு பேச்சு அக்.,21 ல் நடந்தது.மில் திறப்பது, தொழிலாளர்களுக்கு முழுச்சம்பளம் வழங்குதல், தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்குவது குறித்து தொழிற்சங்க தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கோவையில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.அதன்படி, நேற்று தமிழகத்திலுள்ள, ஏழு என்.டி.சி., மில்களில் பணிபுரியும், 4,000 தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீத போனஸ் மற்றும் அக்., மாதத்திற்கான, 50 சதவீத சம்பளம் வங்கிக்கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. மில் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,'போனஸ் மற்றும் சம்பளம் வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல், மில் இயக்கத்தை துவக்கி, தொழிலாளர்களுக்கு வேலை, முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X