சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு 'ரெய்டு'  ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

Added : நவ 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 4.39 லட்சம் ரூபாய் சிக்கியது.திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார், திருப்பூர், பல்லடம் ரோடு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில், நேற்று
 திருப்பூரில் லஞ்ச ஒழிப்பு 'ரெய்டு'  ரூ. 4.39 லட்சம் பறிமுதல்

திருப்பூர்:திருப்பூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத, 4.39 லட்சம் ரூபாய் சிக்கியது.திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார், திருப்பூர், பல்லடம் ரோடு, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில், நேற்று மாலை, 5:00 மணிக்கு, 'ரெய்டு' நடத்தினர். அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.தொடர்ந்து, கணக்கில் வராத பணம், நான்கு லட்சத்துக்கு, 39 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று இரவு, 9:00 மணியை கடந்தும், ரெய்டு தொடர்ந்தது. அலுவலகத்தில் இருந்து பட்டாசு, ஸ்வீட் பாக்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X