பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா தாக்கியவர்களில் சர்க்கரை நோயாளிகளே அதிகம்'

Added : நவ 13, 2020
Share
Advertisement
திருப்பூர்:ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் (நீரிழிவு) தினம் கடைபிடிக்கப்படுகிறது.அரசு மருத்துவர்கள் கூறியதாவது:சர்க்கரை நோய் அதிகளவில் உள்ளவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எட்டு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வயதாகும்போது, கணையத்தில், 'பீட்டா செல்' செயல்பாடு குறைந்து, இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால், பலருக்கு,

திருப்பூர்:ஆண்டுதோறும் நவ., 14ம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் (நீரிழிவு) தினம் கடைபிடிக்கப்படுகிறது.அரசு மருத்துவர்கள் கூறியதாவது:சர்க்கரை நோய் அதிகளவில் உள்ளவர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. எட்டு கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வயதாகும்போது, கணையத்தில், 'பீட்டா செல்' செயல்பாடு குறைந்து, இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால், பலருக்கு, சர்க்கரை நோய் இருப்பது தாமதமாக தான் தெரியவருகிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில், ரத்தப்பரிசோதனை செய்துகொள்வது அவசியம். நடைபயிற்சி செய்வது சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு. சர்க்கரை நோய், பார்வையையும் பாதிக்கும். 2025க்குள், நாட்டில், 70 லட்சம் பேர் வரை சர்க்கரை நோயால், பார்வையை முழுமையாக இழக்கும் அபாயம் உள்ளது.சர்க்கரை நோயில், இரண்டு வகைகள் உள்ளன. 'டைப் 1' என்பது இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்றுவிடுதல்; 'டைப் 2' என்பது, இன்சுலின் சுரக்கும். ஆனால், முறையாக பயன்படுத்த முடியாது. இவ்வகை சர்க்கரை நோயாளிகள்தான், 90 சதவீதத்தினர் உள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டோரில், 60 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகளாக இருக்கின்றனர். சிறந்த கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மூலம், பெரும்பாலானோர் மீண்டு வந்திருக்கின்றனர். கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது ரத்தத்தில், சர்க்கரை அளவு சீராக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X