பொது செய்தி

தமிழ்நாடு

கிளப்புறாங்கய்யா... 

Added : நவ 13, 2020
Share
Advertisement
படிக்கட்டில் விழுந்த பெண்இளம்பெண் ஒருவர் பக்கெட்டில் அமர்ந்து கொண்டு, வீட்டு படிக்கட்டில் சறுக்கி விளையாட ஆசைப்படுகிறார். அதற்காக, அவர் பக்கெட்டில் அமர்ந்ததும், தோழி பின்னால் இருந்து தள்ளி விடுகிறார். ஆனால், பக்கெட் அப்படியே தலைக்குப்புற உருண்டதால், அப்பெண்ணும் 'பல்டி' அடித்தபடி கீழே விழுகிறார். அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் அவர் உயிர்தப்புகிறார்.
 கிளப்புறாங்கய்யா... 

படிக்கட்டில் விழுந்த பெண்இளம்பெண் ஒருவர் பக்கெட்டில் அமர்ந்து கொண்டு, வீட்டு படிக்கட்டில் சறுக்கி விளையாட ஆசைப்படுகிறார். அதற்காக, அவர் பக்கெட்டில் அமர்ந்ததும், தோழி பின்னால் இருந்து தள்ளி விடுகிறார். ஆனால், பக்கெட் அப்படியே தலைக்குப்புற உருண்டதால், அப்பெண்ணும் 'பல்டி' அடித்தபடி கீழே விழுகிறார். அதிர்ஷ்டவசமாக, சிறு காயங்களுடன் அவர் உயிர்தப்புகிறார். விளையாட்டாக செய்த காரியம், கடைசியில் வினையில் முடிந்திருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.பஸ்சை வழிமறித்த யானைஇலங்கையில், கட்டரங்காமாவில் சாலையின் நடுவே, ஒரு யானை நின்று கொண்டு பஸ்சை வழிமறிக்கிறது. பின்னர், டிரைவரின் அருகே உள்ள ஜன்னல் வழியே தும்பிக்கையை உள்ளே விட்டு, பஸ்சில் உள்ள பொருட்களை வேகமாக ஆராய்கிறது. வாழைப்பழம் கிடைத்ததும் தும்பிக்கையை வெளியே எடுத்து, பஸ்சை விடுவிக்கிறது. வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான், டுவிட்டரில் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.யமுனை ஆற்றில் நுரைப்படலம்ஹரியானா, டில்லி, உ.பி., மாநிலங்களில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் துாய்மைப்படுத்தப்படாமல், யமுனை ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவுநீரால் ஆற்றில் நுரைப்படலம் உருவாகி பெரும்பாலான நீர்பரப்பு மூடப்பட்டுள்ளது. இதனால், நீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து நீர்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.114 ஆண்டானாலும் ஒரே சுவைதாய்லாந்தின், தானி மாகாணத்தில் உள்ள பதுாம் என்ற இடத்தில், டியா யங்லி என்ற காபி கடை, 114 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மூன்று தலைமுறைகளை தாண்டி செயல்பட்டு வரும் இந்த காபி கடையின் தற்போதைய உரிமையாளர் அனான்சாய், காபி கொட்டையை வறுத்து அரைத்து வாடிக்கையாளர்களுக்கு காபி வழங்கி வருவதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். பழமை மாறாத கட்டடத்தில் செயல்பட்டு வந்தாலும், விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் வழக்கம்போல விற்பனையாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X