வடலுார் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடலுார் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டர் தேவை

Added : நவ 13, 2020
Share
வடலுார்;நீண்ட நாட்களாக இன்ஸ்பெக்டர் இல்லாததால், வடலுார் ஸ்டேஷனில் பணிகள் பாதிக்கின்றன.வடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக ரவீந்தர் ராஜ், கடந்த 2019, ஜூலை 31ம் தேதி பொறுப்பேற்றார். ஒருமாதம் மட்டுமே பணியில் இருந்த அவர், உடல்நிலை பாதித்து விடுமுறையில் சென்றார். அதிலிருந்து வடலுார் ஸ்டேஷனுக்கு தனி இன்ஸ்பெக்டர் பதவியில் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி அனைத்து

வடலுார்;நீண்ட நாட்களாக இன்ஸ்பெக்டர் இல்லாததால், வடலுார் ஸ்டேஷனில் பணிகள் பாதிக்கின்றன.வடலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்ஸ்பெக்டராக ரவீந்தர் ராஜ், கடந்த 2019, ஜூலை 31ம் தேதி பொறுப்பேற்றார். ஒருமாதம் மட்டுமே பணியில் இருந்த அவர், உடல்நிலை பாதித்து விடுமுறையில் சென்றார். அதிலிருந்து வடலுார் ஸ்டேஷனுக்கு தனி இன்ஸ்பெக்டர் பதவியில் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர், கூடுதல் பொறுப்பாக கவனித்தார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி இன்ஸ்பெக்டர் ரவீந்தர் ராஜ் இறந்தார். இதையடுத்து குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர், வடலுார் ஸ்டேஷனை கூடுதல் பொறுப்பாக கவனித்தார். தற்போது மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரே, வடலுார் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.வடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தனி இன்ஸ்பெக்டர் நியமிக்காததால், பணிகள் பாதிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூடுதல் பொறுப்பாக வடலுாரை கவனித்து வரும் இன்ஸ்பெக்டர்களுக்கு, சுமையாக வடலுார் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.வடலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு என தனியாக, புதிய இன்ஸ்பெக்டரை உடனடியாக நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X