புவனகிரி; புவனகிரியில் குற்ற சம்பங்களை தடுக்க அமைத்த கண்காணிப்பு கேமராவை டி.எஸ்.பி., லாமேக் துவக்கி வைத்தார்.புவனகிரி போலீஸ் எல்லைப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அசம்பாவித சம்பவங்களை தெரிந்து கொள்ள கீழ்புவனகிரியில் ரூ.50 ஆயிரம் செலவில் நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இதனை டி.எஸ்.பி., லாமேக் துவக்கி வைத்தார். கண்காணிப்பு கேமராவின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினார். வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்களில் தவறாமல் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தினார். புவனகிரி இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், புவனகிரி வர்த்தக சங்க தலைவர் ரத்தினசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE