பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுாரில் பூக்களின் விலை விர்ர்...

Added : நவ 13, 2020
Share
Advertisement
கடலுார்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுாரில் கனகாரம்பரம் பூ கிலோ ரூ. 1,200 விற்றது. பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுாரில் 5 மாதங்களுக்கு மேலாக பூக்களின் விற்பனை சரிந்தது.கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதும் குறைந்ததால், பூக்களை விற்க முடியாமல், விவசாயிகள், வியாபாரிகள் பாதித்தனர். தற்போது
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுாரில் பூக்களின் விலை விர்ர்...

கடலுார்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுாரில் கனகாரம்பரம் பூ கிலோ ரூ. 1,200 விற்றது.

பண்டிகை காலங்களில் வழக்கமாக பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக கடலுாரில் 5 மாதங்களுக்கு மேலாக பூக்களின் விற்பனை சரிந்தது.கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடப்பதும் குறைந்ததால், பூக்களை விற்க முடியாமல், விவசாயிகள், வியாபாரிகள் பாதித்தனர். தற்போது தளர்வுகள் அறிவித்த நிலையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடக்க துவங்கியுள்ளன. இதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூக்களின் விலை சூடுபிடித்தது. இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலுாரில் பூக்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. கடந்த வாரம் வரை ரூ. 500 விற்ற கனகாம்பரம் பூ அதிகபட்சமாக நேற்று ரூ. 1000 முதல் 1,200 விற்றது.கடந்த வாரம் ரூ.100 விற்ற சாமந்தி 200 - 240க்கும், 300க்கு விற்ற அரும்பு 600 - 800, 150க்கு விற்ற காக்கட்டான் 800க்கும், 400க்கு விற்ற குண்டுமல்லி 900க்கும், 300க்கு விற்ற ஜாதிமல்லி 800க்கும், 100க்கு விற்ற ரோஸ் 240-300க்கும், 40க்கு விற்ற கேந்தி 80 -100க்கும், 30 ரூபாய்க்கு விற்ற கோழி கொண்டை பூ ரூ. 60க்கு நேற்று விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X