தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே, பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடக்கும்.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக சமீபத்தில் தான் கடைகள் திறக்கப்பட்டன.பட்டாசு கடைகளுக்கு மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகள் விதித்ததில் இருந்து, வியாபாரிகளுக்கு கெடுபிடி மற்றும் உரிமம்வழங்குவது, புதுப்பித்தல் நடை முறைகள் உள்ளிட்ட காரணங்கள்ஒருபுறம், பட்டாசு வெடிக்கும் நேரம் குறைப்பு போன்ற காரணங்களால், பட்டாசு விற்பனையும் குறைந்து வருகிறது.கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 535 பட்டாசு கடைகள் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 20 கோடிக்கு குறையாமல் வியாபாரம் நடக்கிறது. இந்த ஆண்டு கூடுதலாக 35 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.எச்சரிக்கைதடை செய்த பட்டாசுகளை விற்றாலோ, வைத்திருந்தாலோகடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் பட்டாசுவிற்கக் கூடாது. தீபாவளிக்கு காலை 6:00 முதல் 7:00, மாலை 7:00 முதல் 8:00 வரையில் விற்பனைக்கு கோர்ட் அனுமதித்துள்ள நிலையில், விதிமுறைகள் மீறுவதை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாசில்லாத பட்டாசுகளை, பாதுகாப்பாக வெடித்தும், கொேரானா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் மகிழ்வான தீபாவளியை கொண்டாட வேண்டும் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி கேட்டுக்கொண்டுள்ளார்.தீயணைப்பு துறை 'உஷார்'பட்டாசுகள் வெடிப்பதிலும், மத்தாப்புகள் கொளுத்துவதிலும் சிறுவர்சிறுமிகள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். தாறுமாறாகவும், கவனக்குறைவாகவும் வெடிக்கும் பட்டாசுகளால் காற்று மாசடைந்து,தீ விபத்துகள் ஏற்படுகின்றன.நாளை தீபாவளி பண்டிகையொட்டி, மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்புத் துறை முடுக்கி விட்டுள்ளது.
அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தயார் நிலையில் இருக்குமாறு நிலைய அதிகாரிகளுக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மாவட்டத்தில் கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டு மன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 15 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.
இது தவிர கடலுாரில் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் ஆகிய இரு இடங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் நகர பகுதிகளில் தலா ஒன்று என, தற்காலிகமாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் அதிகபட்ச வீரர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, விடுமுறை இன்றி 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.விபத்து ஏற்பட்டால் மாவட்டம் முழுவதும் 101 என்ற தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம். அல்லது கடலுார் மாவட்ட அலுவலகத்தை 04142 295101, 293301 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டால், விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE