கடலுார்; பக்தர்கள் சபரிமலை யாத்திரையை தவிர்க்குமாறு அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.சங்க செயலாளர் ஆத்மானந்தா சரஸ்வதி, பொருளாளர் வேதாந்த ஆனந்தா, துணைத் தலைவர் ராமானந்தா விடுத்துள்ள அறிக்கை:கொரோனா தொற்று காரணமாக சபரிமலை கோவிலுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1000 பக்தர்கள், சனி, ஞாயிறுக் கிழமைகளில் 2000 பக்தர்கள், மண்டல விழாவில் 5000 பக்தர்கள்,மகரஜோதி விழாவில் 5000 பக்தர்கள் மட்டும் அனுமதி என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரளாவில் தற்போது கொரோனாஅதிகமாக பரவி வருகிறது. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE