கடலுார்; கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ தினமான நேற்று பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. மாலை 4:00 மணியளவில் பிரதோஷ நாயகரான நந்தி பகவானுக்கு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது.நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார். பூஜைகளை குமார், ஹரிபிரபு குருக்கள் செய்தனர். உற்சவர் புவனாம்பிகை சமேதராய் பூலோகநாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதே போல், கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE