கடலுார்; கடலுாரில் கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 9.48 லட்சம், இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது.அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில், 2029-2020ம் ஆண்டுக்கு லாப பிரிவினையில் செலுத்த வேண்டிய சட்டப்பூர்வ நிதிகளான கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி ரூ. 5.69 லட்சம் மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 3.79 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டது.கடலுார் அலுவலகத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமாரிடம், சங்க நிர்வாக குழு தலைவர் கபில்தேவ் வழங்கினார். சிதம்பரம் சரக துணைப்பதிவாளர் துரைசாமி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் வரதராஜன், பாலகிருஷ்ணன், சக்திவேல், சங்க செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE